Share via:
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களுடையது தான். அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரதீர சாகச செயல்கள் மக்கள் மனதில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது.
இன்று (ஜன.3) சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.