Share via:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதியையும் தி.மு.க.
கைப்பற்ற வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறது. இந்த லட்சியத்தை அடையவேண்டும் என்றால்
கடந்த தேர்தலில் நின்று ஜெயித்த 14 பேருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது என்று
கட்சி நிர்வாகத்தை மறைமுகமாக நடத்திவரும் சபரீசன் நோட் போட்டு ஸ்டாலினுக்குக் கொடுத்திருக்கிறார்.
இந்த 14 தொகுதிகளிலும் எம்.பி.க்களுக்கு எதிராக மக்கள் மனநிலை
இருப்பதால், இப்போதே இதில் முடிவெடுத்தால் மட்டுமே, புதிய வேட்பாளர்களைத் தேர்வு செய்து
அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க முடியும் என்று சபரீசன் கூறியிருக்கிறார். இந்த பட்டியலைப்
பார்த்த ஸ்டாலின், இதனை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது.
சபரீசன் பட்டியலில் ரெட் இங்க் மார்க் போடப்பட்ட 14 எம்.பி.க்களின்
பட்டியல் இதுதான்.
1. கலாநிதி
வீராசாமி, சென்னை வடக்கு
2. சண்முகசுந்தரம்,
பொள்ளாச்சி
3. கெளதம சிகாமணி,
கள்ளக்குறிச்சி
4. கதிர் ஆனந்த்,
வேலூர்
5. ராமலிங்கம்,
மயிலாடுதுறை,
6. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,
தஞ்சாவூர்
7. ஞானதிரவியம்,
நெல்லை
8. தனுஷ்குமார்,
தென்காசி
9. ரமேஷ்,
கடலூர்
10. செல்வம்,
காஞ்சிபுரம்
11. அண்ணாதுரை,
திருவண்ணாமலை
12. வேலுச்சாமி,
திண்டுக்கல்
இந்த 12 பேர் தவிர நவாஸ்கனி, ராமநாதபுரம் (இந்தியன் யூனியன் முஸ்லீம்
லீக்) மற்றும் பாரிவேந்தர், பெரம்பலூர் ஆகியோருக்கும் இந்த முறை சீட் கிடையாது என்றே
முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாரிவேந்தர் ஏற்கெனவே பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டதால்
நவாஸ்கனியே ரொம்பவும் பதறிக்கொண்டு இருக்கிறார்.