News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளநிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளதாக கட்சித் தலைமையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கிவே எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் பயணம் என்று பல்வேறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில்தான் வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், உண்மையான சொத்து மதிப்பை மறைத்து தொகுதியில் போட்டியிட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை முதல்  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link