Share via:
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (டிச.26) காலை அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கூட்டம் தொடங்கப்பட்ட போது சமீபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெருமழை வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிடம் கூட்டத்தினர் இரங்கல் தெரிவித்தனர். அதன் பின்னர் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு தொடங்கியது.
பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
இலங்கை தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது.
மத்திய அரசு பாதுகாப்பை மேலும் பலத்தப்படுத்த வேண்டும்.
வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.