News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வானகரத்தில் எடப்பாடி தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்த அதே நேரத்தில், முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம், கோவையில் அவரது ஆதரவாளர்களுடன், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு’ என்ற பெயரில் ஒரு போட்டிக் கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ‘”சாதாரண தொண்டனாக இருந்த நான், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதல்வராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான்.  ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து, தனக்கு தனிப்பட்ட முறையில் நிதி சுமை அதிகமாகிவிட்டதாகச் சொல்லி, வழக்கறிஞர்களுக்கு பணம் தருவதற்கு கட்சி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார். அது உண்மையிலேயே கண்ணீர் விட வேண்டிய சம்பவம்.

உடனே நான் 2 கோடி ரூபாயை வழங்கினேன். அந்த 2 கோடி ரூபாயை ஒரே மாதத்தில் திருப்பி அளித்தார் ஜெயலலிதா, கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. தோற்றுப்போனதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். இ.பி.எஸ். நான் வாயைத் திறந்து பேசினால், அவர் திகார் சிறைக்குதான் செல்ல வேண்டியிருக்கும்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாம் திகார் சிறைக்குச் செல்லும் அளவுக்கு தில்லுமுல்லு செய்திருக்கிறார், அதற்கான ஆவணங்கள் பன்னீரிடம் இருப்பதாலே இப்படி பேசியிருக்கிறார். ஆகவே, பன்னீரிடம் உடனடியாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் கோரிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படி சிக்கல் வருமென்று தெரிந்துதானோ என்னவோ, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் மோடி பிரதமராக மீண்டும் வருவார்’ என்று நேரடியாக பா.ஜ.க.வை குளிர வைத்திருக்கிறார்.

அதுசரி, முன்னாள் முதல்வர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்றால், அதை விசாரிக்க வேண்டியது சி.பி.ஐ. கடமை தான். செய்யுமா என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link