Share via:
நடிகர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக டிசம்பர் 28 காலை உயிர் இழந்ததாக மியாட் மருத்துவமனை
அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், கண்ணீரும் கம்பலையுமாக கடைசி முறையாக அவரது முகத்தைப்
பார்ப்பதற்கு தே.மு.தி.க. தலைமையகத்தில் வரிசையில்
நிற்கிறார்கள்.
அவர்கள் கண்ணீருடன் பேசியபோது, ‘’மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவரை
முடிந்த வரையிலும் தனிமை படுத்த வேண்டும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால், மருத்துவமனையில்
இருந்து வந்த அடுத்த நாளே பொதுக்குழு என்று அத்தனை பேர் மத்தியில் எங்கள் புரட்சிக்
கலைஞரை காட்சிப் பொருளாக அமர வைத்ததைக் கண்டு நாங்கள் ரொம்பவே வேதனைப்பட்டோம்.
விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக மக்களுக்குக் காட்டினால்தான் வரும்
நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு சீட்டாவது பா.ஜ.க.விடம் வாங்க முடியும் என்பதற்காகவே
அப்படி காட்சிப் பொருளாக எங்கள் கேப்டனைக் காட்டினார்கள். அன்றைய தினம் அன்பு மிகுதியால்
எக்கச்சக்க ரசிகர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் இருந்துதான் நோய் மீண்டும் தொற்றியிருக்க
வேண்டும்.
கேப்டனை தனிமைப்படுத்தி கவனித்து வந்தால் நிச்சயம் குணமடைந்து
இருப்பார். இப்படி திடீரென மரணமடைவார் என்று நாங்கள் கொஞ்சமும் நினைக்கவே இல்லை’’ என்று
கண்ணீர் விட்டனர்.
கேப்டனுக்கு அஞ்சலி.