Share via:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த அ.தி.மு.க.
நான்கு பிரிவாக நிற்கிறது. தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அ.ம.மு.க.வை
தொடங்கிவிட்டார். சசிகலா அ.ம.மு.க.வுக்கு இன்னமும் முழுமையாக ஆதரவு கொடுக்காமல் அண்ணா
தி.மு.க.வுக்குள் எப்படியாவது நுழைந்துவிட முடியுமா என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள்
எடுத்துவருகிறார்.
சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பன்னீரும் தினகரன் இணைந்து செயல்படுவதற்கு
முடிவு எடுத்துவிட்ட நிலையில், சசிகலா மட்டும் தனியே நிற்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி
எப்படியாவது தான் மட்டும் கட்சிக்குள் நுழைந்துவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து
பேசிவருகிறார்.
அந்த வகையில் தற்போது தென் மாவட்ட வெள்ளப்பெருக்கு மீட்பு நடவடிக்கைகள்
குறித்து பேசிய சசிகலா, ’அரசு எதற்கெடுத்தாலும் பணம்இல்லை என சொல்கிறது. ஆனால், தமிழக
அரசு, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, தனியார் பங்களிப்பு என மொத்தம் ரூ.240 கோடி செலவில்
கார் பந்தயம் நடத்த போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர். இதற்கான தொகை எங்கிருந்து
வருகிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன், ஆனால் பேரிடரின்போது மக்களை மீட்க போர்க்கால
அடிப்படையில் பணிகளைச் செய்யவில்லை. விளம்பரத்தை மட்டுமே திமுக அரசு நம்பியிருக்கிறது.
கல்விக் கடனை ரத்து செய்யவில்லை.
அதிமுகவின் அனைத்து அணிகளையும் சேர்க்க முடியும். எம்ஜிஆர்,
ஜெயலலிதாவின் கருத்துகளை நிறைவேற்றும் பொறுப்பு பிரிந்த அனைத்து அணியினருக்கும் இருக்கிறது.
விரைவில் நல்ல முடிவு வரும்’’ என்று அவரது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொடர்ந்து மீண்டும் மீண்டும் எடப்பாடிக்கு வெள்ளைக் கொடி காட்டிவந்தாலும்,
அந்த பக்கமிருந்து எந்த சிக்னலும் சசிகலாவுக்குக் கொடுக்கப்படவே இல்லை. வரும் நாடாளுமன்றத்
தேர்தலுக்குள் எப்படியாவது அ.தி.மு.க.வுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதை இல்லாக
சசி வைத்திருக்கிறாராம்
அதுசரி, எடப்பாடி பக்கம் இருந்து ஒரு புகை கூட வரலையே… எப்படி
மேடம் சேருவீங்க..?