Share via:
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது.
நடிகர் விஷால், எஸ்.சூர்யா நடிப்பில் டைம் டிராவல் கதைக்களத்துடன் தயாராகியுள்ள படம் மார்க் ஆண்டனி. தொடர்ந்து விஷாலின் படங்கள் தோல்வியடைந்த நிலையில் அவரின் முழுநம்பிக்கையாக இருப்பது மார்க் ஆண்டனி படம்தான்.
இதன் டிரெய்லர் வெளியாகி ரகிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக சில்க் ஸ்மிதா நடிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நடிகர் விஷால், தன்னடைய படத் தயாரிப்பு நிறுவமான விஷால்பிலிம் பேக்டரியின் படத் தயாரிப்புக்காக கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி ரூபாய் கடனாக கேட்டிருந்தார். இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்திவிட்டது.
இந்த பணத்தை திருப்பி தரும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனம் பெறுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்காத போது விஷால் படதயாரிப்பு நிறுவனத்தின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையிட முயற்சித்த போது, அந்த படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்கவும் தடை விதிக்க லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இவ்வழக்கு தொடர்பாக ரூ.15 கோடியை டெபாசிட் தொகை¬யாக லைகா நிறுவனத்திற்கு விஷால் செலுத்த உத்தரவிட்டார். இதை எதிர்த்து விஷால் செய்த மேல்முறையீடு வழக்கும் அந்த தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி தெரிவித்தபடி விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகளிலும், ஓ.டி.டி.யிலும் வெளியிடக் கூடாது என தடை விதித்த உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு கடந்த 8ம் தேதிவிசாரணைக்கு வந்த போது விஷால் ரூ.15 கோடியை செலுத்தவில்லை என்று லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்தநிலையில்தான் செப்டம்பர் 15ம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு செப்12ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தது.
இவ்வழக்கில் இன்று கோர்ட்டில் விஷால் ஆஜரான நிலையில், விஷாலுக்கும், மார்க் ஆண்டனி தயாரிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று படத்தின் மீதான வெளியீட்டு தடையை கோர்ட்டு நீக்கியுள்ளது. மேலும் விஷால் தனது வங்கிபணப்பரிவர்த்தனை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யடும் நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே மார்க் ஆண்டனி திரைப்படத்தை திரையிடுவது குறித்த பிரச்சினை நீங்கி, வருகிற செப்டம்பர் 15ம் தேதி அறிவித்தபடி வெளியாகும் என்று தெரிகிறது.

