Share via:
சென்னை சாந்தோம் கதீட்ரல் ஆரம்பப் பள்ளியில் த.மா.கா. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (டிச.22) நடைபெற்றது. வடசென்னை த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ. சாக்கோ இவ்விழாவுக்கு தலைமை தாங்கிய நிலையில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகளை வழங்கினார்.
அதன் பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மகிழ்ச்சியாக நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில், சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, மாநில மகளிர் அணி தலைவி ராணி கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் பொன்.வில்சன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘இனிவரும் நாட்களிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெறும் என்று தெரிவித்த அவர், வலிமையான பாரதத்தை உருவாக்கும் பணியில் த.மா.கா. சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் கிறிஸ்துமஸ் விழா சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு த.மா.கா. கட்சியினரான நாங்கள் எப்போதும் துணை நிற்போம்’’ என்று தெரிவித்தார்.