Share via:
தாய்ப்பாசத்துக்கு
நிகராக இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், பெற்ற தாயே
பிள்ளைகளை கொல்லும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது. நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும்
ஒரு பெண் செய்திருக்கும் பகீர் கொலையால் இந்தியாவே அதிர்ந்து நிற்கிறது.
பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
சுசனா சேத், சுசனாவுக்கும் வெங்கட்டுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த அடுத்த ஆண்டே இருவரும்
பிரிந்துவிட்டனர்.
நீதிமன்றத் தீர்ப்பின் படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மகனை குழந்தையின்
தந்தையிடம் அழைத்துச்சென்று காட்டவேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கணவரிடம் குழந்தையை
காட்டக்கூடாது என்பதற்காகத்தான் மகனுடன் கோவாவிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அப்பாவை பார்க்கவேண்டும் என்று சிறுவன் ஆசையாகக்
கேட்டிருக்கிறான். மேலும் எனக்கு அப்பாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறான்.
இதை கேட்டு கடுப்பான சுசனா, உடனே கழுத்தைப்பிடித்து நெரித்துள்ளார். அதில் சிறுவன்
இறந்து போயிருக்கிறான்.
உடனே பயந்துபோன சுசனா தன்னுடைய கையில் கத்தியால் கட் செய்து தற்கொலை
செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். கையை அறுத்ததும் வந்த ரத்தத்தைப் பார்த்துப் பயந்தவர்,
சிறுவன் உடலை மறைத்துவிட்டு நாடகமாட முடிவு எடுத்திருக்கிறார்.
அதன்படி சூட்கேஸில் பையன் உடலை அடக்கிவைத்து, அதை தூக்க முடியாமல்
தூக்கிக்கொண்டு அவசரம் அவசரமாக ஹோட்டலை காலி செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார். அந்த
ரூமை சுத்தம் செய்ய வந்த பணியாளர் ரத்தத்தைப் பார்த்து தகவல் தெரிவிக்கவே, போலீஸ் விசாரணையில்
இறங்கி பெங்களூரு போன சுசனாவை கைது செய்துவிட்டார்கள்.
போலீஸாரிடம் பேசுகையில், ‘நான் என் மகன் மீது உயிரையே வைத்திருக்கிறேன்.
ஆனால், அவன் எப்போதும் அப்பாவை பிடிக்கும் என்று கூறிக்கொண்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை,
அதனாலே கழுத்தைப் பிடித்து நெரித்தேன், செத்துவிட்டான்’ என்று கூறி அழுதிருக்கிறார்.
விசாரணையில் இன்னும் என்னவெல்லாம் வெளிவரப்போகிறதோ… அம்மாவே இப்படி
என்றால்…