News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டீன் ஏஜ் பருவத்தில் ஆசிரியர் மீது பெண் பிள்ளைகளுக்கும் ஆசிரியை மீது பையன்களுக்கும் ஈர்ப்பு வருவது இயல்பான விஷயமே. எல்லோருமே இந்த கட்டத்தை கடந்தே வந்திருப்பார்கள். ஒருசில பிள்ளைகள் இதில் எல்லை மீறும்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியரும் ஆசிரியையும் அவர்கள் தலையில் கொட்டு வைத்து ஹார்மோன் லீலைகளை புரிய வைப்பார்கள்.

ஆனால், காதலை சொன்ன மாணவனுடன் ஆசிரியை ஓடிப்போனதும், ரகசியமாக தனிக்குடித்தனம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது போக்ஸோ வழக்கில் ஆசிரியை சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்த மாணவனுக்கு அந்த பள்ளியில் ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை எப்சிபா மீது காதல் வந்துள்ளது. ஆசிரியை வீட்டுக்கே போய் தேவையான உதவிகளை செய்துகொடுத்திருக்கிறான். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தன்னுடைய காதலை சொல்லியிருக்கிறான்.

உனக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம், உலகம் இதை ஏற்றுக்கொள்ளாது என்றெல்லாம் முதலில் ஆசிரியை சொல்லிப் பார்த்தாராம். ஆனால், மாணவன் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை. எனவே, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோவைக்குப் போய்விட்டார்.

அதன்பிறகு மாணவன் தன்னை மறந்துவிடுவார் என்று நினைத்திருக்கிறார் எப்சிபா. ஆனால், மாணவனோ நேரடியாக கோவைக்கே போயிருக்கிறான். உடனடியாக அவனுடைய பெற்றோரை அழைத்து விஷயத்தைக் கூறியிருந்தால் பிரச்னை இல்லாமல் போயிருக்கும்.

ஊருக்கு தகவல் சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மாணவன் சொன்னான் என்பதற்காக, அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டு தனிக்குடித்தனம் நடத்தத் தொடங்கியிருக்கிறார். உஷாராக தன்னுடைய போன் நம்பரை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறார்.

மாணவனைக் காணவில்லை என்று அவனது பெற்றோர் தாழம்பூர் போலீசில் புகார் அளித்தனர். இகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல்போன மாணவனை பல இடங்களில் தேடி வந்தனர். ஆசிரியை மீது சந்தேகப்பட்டு தேடினாலும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஆசிரியை அவரது நம்பரிலிருந்து தற்செயலாக வேறு ஒருவருக்கு போன் செய்யவே, அந்த நம்பரை வைத்து அவர் கோயம்புத்தூரில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

பின்னர், கோயம்புத்தூர் போலீசாருடன் தொடர்புகொண்டு அந்த ஆசிரியை தங்கி இருந்த இடத்தை சோதனை செய்தபோது அவருடன் காணாமல் போன மாணவனும் இருப்பது தெரியவந்தது.

மேற்கொண்டு நடந்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை எப்சிபா என்பதும் அவருக்கு 28 வயது, 2018ல் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்வதும் தெரியவந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்துள்ளார்.

மாணவன் மைனர் என்பதால், இவ்வழக்கு தாம்பரம் சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை எப்சிபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவ, மாணவியர்கள் வாழ்வில் விளையாடும் ஆசிரியர், ஆசிரியைகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான், மற்றவர்கள் தவறு செய்வதற்குத் தயங்குவார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link