Share via:
டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடியை சந்தித்துத தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் அவர்களின் பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்ட தமிழக அரசு அவர்களை முகாம்களில் தங்க வைத்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது.
வெள்ள சேதத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் மற்றும் ஒன்றிய குழுவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி குறித்த கோரிக்கையை முன்வைத்தார். இதற்கிடையில் குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேற்று இரவு (டிச.19) சந்தித்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.
அதன்படி வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டு மழை வெள்ள பாதிப்பு சேதங்களை சரி செய்ய ஏற்கனவே தெரிவித்தபடி தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகை¬யான ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடியிடம் கேட்டுக் கொண்டார்.
அதன்படி பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு மட்டும் அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விரைந்து வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.