Share via:
0
Shares
தமிழக வெற்றிக் கழகம் என்று அறிக்கை மூலம் கட்சி தொடங்கியிருக்கும்
நடிகர் விஜய், 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். இதையடுத்து
ஊர் முழுவதும் கொடி ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து உளுந்தூர் பேட்டையில் கொடி ஏற்றி விட்டார்கள். ஆனால்
கிராமங்களில் கொடியேற்றுவதற்கு வருவாய்த்துறை,
காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி
வைக்கப்பட்ட த.வெ.க. கொடிக் கம்பங்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
இப்படி அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக்
கழக மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த லட்சணத்தில் எப்படி 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப் போகிறார்களோ..?
Tagged latest