Share via:
இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பி.ராமமூர்த்தியின் நினைவு சொற்பொழிவு நேற்று (டிச.14) சென்னையில் நடைபெற்றது. இவர் கம்யூனிச இயக்கத்தின் நவரத்தினங்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆங்கிலத்தில் உரையாற்றிய நிலையில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கி.ரமேஷ் எழுதிய பி.ராமமூர்த்தி வாழ்க்கை வரலாறு நூலை கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டார். பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள இந்த புத்தகத்தை பி.ஆர்.புதல்விகள் மருத்துவர் பொன்னி, வழக்கறிஞர் ஆர்.வைகை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், பி.சம்பத், பி.ஆர் புதல்விகள் மருத்துவர் பொன்னி, வழக்கறிஞர் ஆர்.வைகை மற்றும் பி.ஆர்.நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்து சிறப்பித்தர்.
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் பி.ஆர்.நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் உள்ளனர்.