Share via:
நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று எதிர்ப்பு குரல் கொடுத்த காரணத்திற்காக இதுவரை 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குளிர்கால நாடாளுமன்றத் தொடரில் பங்கேற்க முடியாது.
சஸ்பெண்ட் குறித்து பேசிய கனிமொழி, ‘’பாதுகாப்பு விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜ.க. எம்.பி. இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றார். இந்த முறைகேட்டுக்கு துணை போன எம்.பி. யார் என்று மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், ஆச்சர்யமாக இதுவரை அந்த எம்.பி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, விசாரணையும் நடக்கவில்லை.
ஆனால், பிரதமரும் உள்துறை அமைச்சரும் மக்களுக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியதற்காக இதுவரை 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதான் ஜனநாயகமா..?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்,.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்தவர்களின் பட்டியல் இதோ. கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன். இவர்களில் எஸ்.ஆர்.பார்த்திபன் அவைக்குள்ளேயே இன்று வரவில்லை என்றாலும் எப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதுதான் மெகா ஆச்சர்யம்.