Share via:
மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக நீர்வழித்தடங்களில் ஏற்பப்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (டிச.11) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நீரில் மூழ்கின. வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இதைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக மீட்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதோடு மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த தொகை இன்னும் ஒரு வார காலத்தில் வழங்கப்பட்டுவிடும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கான டோக்கன் வருகிற 16ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், பூண்டி மற்றும் பிற ஏரிகளிலும் அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் பிற நீர்வழித்தடங்கலில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்புகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா, முதன்மை தலைமை பொறியாளர் ஏ.முத்தையா, நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.