Share via:
மிக்ஜாம் புயல் பேரிடரை தொடர்ந்து சேத்துப்பட்டில் அமைந்துள்ள சர்வோதயா காப்பகத்திற்கு நேரில் சென்ற தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் பி.கே.சேகர் பாபு, கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் ஆகியோர் சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள சர்வோதயா காப்பகத்திற்கு நேரில் சென்றனர். அதன் பின்னர் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
அதன் பின்னர் புதிய பூபதி நகர், ஓசன் குளம், சேத்துப்பட்டில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.