News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கர்நாடகா சென்ற பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவின் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்&ன் இயக்கம் மற்றும் பணிகள் குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தார்.

அதன் பின்னர் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். பயணத்திற்கான பிரத்யேக உடையுடன் பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் உட்கார்ந்தபடியும், அதன் அருகே நின்றபடியும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது.இந்த அனுபவம் நம்ப முடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசியதிறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது’’ என்று பெருமிதத்துடன் பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link