Share via:
சர்வதேச இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் அவதாரம் எடுத்துள்ளது பாராட்டுதல்களை குவித்து வருகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன்2 படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ என்ற பாடலையும் பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ‘மின்மினி’ என்ற புதிய படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இத்திரைப்படத்தை ஹலிதா ஷமீம் இயக்கி வரும் நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து தயாராகிக்க உள்ள ‘லயனஸ்’ என்ற திரைப்படத்தில் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரு நாட்டின் திரைப்பட கழகங்களும் இணைந்து லயனஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதால் சர்வதேச அங்கீகாரத்தை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இங்கிலாந்து நாட்டு நடிகை பைஜ் சந்து மற்றும் இந்திய நடிகை அதிதி ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கோவாவில் நடைபெற்று வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘லயனஸ்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.