Share via:
பிரபல தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் ரூ.16 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில் யூடியூப் பிரபலமாகவும் இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி இவர் பதிவிடும் யூடியூப் வீடியோக்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு வந்தது.
நடிகை மகாலட்சுமி தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.இந்த ஜோடி உருவகேலிக்கு ஆளாகிய நிலையிலும், தங்கள் இல்லற வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னிடம் ரூ.18 கோடி மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தார். கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக தன்னை சேர்த்துக் கொள்வதாக பாலாஜியிடம் கூறிய ரவீந்தர் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் மத்திய குற்றபிரிவு போலீசார், ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று ரவீந்தர் மேலும் 2 பேரிடம் 8 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ரவீந்தர்- மகாலட்சுமி ஜோடி தனது முதல் வருட திருமணநாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

