News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

9 தமிழக இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 

இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி, அண்ணாதுரை, வீரமுத்து உள்ளிட்ட 9 பேர் தமிழகத்தின் பெருமையை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளனர்.

 

அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழக விஞ்ஞானிகளின் பெருமையை போற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிடுகிறேன். முதல் அறிவிப்பு, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த,இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிற அறிவியல் மேதைகளான 9 விஞ்ஞானிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

 

மேலும் உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவும் கிடையாது. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்தை தமிழக அரசு அடையாளம் கண்டு இந்த தொகை¬ உங்களுக்கு வழங்கி உள்ளது. இதை ஏற்றுக் கொண்டு மேலும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link