Share via:
நேர்மையின் சிகரம் என்று கருதப்படும் அண்ணாமலையின் குடும்பத்தார்
மீது ரெய்டு நடந்தபோதே பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. இந்நிலையில் மாரிதாஸ்
ஆதாரத்துடன் அண்ணாமலை சொத்து வாங்கிய தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக பாஜகவை அலற விட்டுள்ளது.
அண்ணாமலை ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள்.
இந்நிலையில், அண்ணாமலை சொத்து வாங்கியதாக கூறிய புகாரை மாரிதாஸ்
வாபஸ் செய்துவிட்டார் என்று கூறப்பட்டது. இதற்கு மீண்டும் வெகுண்டெழுந்து அண்ணாமலையை
அடித்திருக்கிறார் மாரிதாஸ்.
இது குறித்து மாரிதாஸ் இன்று, ‘’எம்.எல்.ஏ.வும் இல்லை ,ஆளும் கட்சிகாரரும்
இல்லை. ஆனால், அண்ணாமலை ண்டாமுத்தூர் நிலம் சுமார் 5 கோடிக்கு பதிவு செய்கிறார் அதன்
மதிப்பு 80 கோடி அளவில் இருக்கும் என்று கூறியதற்கே இப்படி கதறல் என்றால். அந்த சொத்து
வந்த விதம் சொல்கிறேன் கேளுங்கள். எவ்வளவு கிரிமினல் இந்த அரசியல்வாதி சொந்தங்கள் என்பது
புரியும்.
இந்த சொத்துக்குரிய பெருமாள்சாமி என்ற நபரிடம் காசை 2023 இறுதியில்
முடித்துவிட்டனர். 2024 ஜனவரியில் அந்த சொத்தை தன் சொந்தம் சார்ந்த தொடக்க வேளாண்மை
கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்க கூறுகிறார்கள். பொதுவாக கருப்பு பணம் கொடுத்த வாங்கும்
சொத்தை இப்படி தான் சொத்த லாக் செய்வர். அதுவும் தன் சொந்தம் இருக்க கூடிய வேளான்மை
கூட்டுறவு வங்கியில் வெறும் 3 லட்ச்சத்திற்கு வைக்க கூறுகிறார்கள். சொத்தை 2024 ஜனவரியிலேயே
கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்துவிட்டார் அந்த அரசியல்வாதி.
5 கோடி ரூபாய் பத்திரப்பதிவு செய்ய ஒரு இடத்தை எவனாது 3 லட்சத்திற்கு
வைக்க அங்கே தான் சந்தேகமே எழுந்தது. இந்த சொத்து பின்னாளில் 2025 இவருக்கு மாற்றி
கொள்கிறார். தேர்தல் நேரம் வேண்டாமே இதைல்லாம் வீடியோ போட வேண்டாம் என பலர் கேட்டதால்
டிவிட்டை டெலிட் செய்யதேன் ஒழிய வேறு எவனும் காரணம் அல்ல.
கருணாநிதி தன் கையில் ஆட்சி அதிகாரம் வந்த முழுமையாக பின்னாடி
கொள்ளை அடித்தார் – இவன் MLA கூட கிடையாது அதற்குள்ளாக 150 கோடிக்கு நெருங்குகிறது
– கேட்டால் சில பாண்டே சிஸ்யர்கள் ஆதாரம் இருந்தால் வழக்கு போடுங்கள் என்பர் – இதே
தானே கருணாநிதிக்கும் அவர் குடும்பத்திற்கும் பொருந்தும். கருப்பு பணம் 80 கோடி சொத்தை
5 கோடிக்கு எழுதியுள்ளனர், நடந்துள்ளதா இல்லையா? அந்த ஏரியாவில் நீங்களே விசாரிக்கவும்
செண்ட் 5 லட்சம் குறையாமல் போகிறது.
இதற்கு முன் சேம்பர் இன்னொரு பக்கம் ரியல் எஸ்டேட் சொத்து என சுமார்
150 கோடிக்கு இருக்கும் இவர் வளர்ச்சி. இது வரை வந்துள்ளவை இவை. இன்னும் என்ன என்ன
வரும் என்பதை பொருத்திருந்து பார்க்கவும். திமுக அமைச்சர் சக்கரபாணி அவர் சொந்தகளை
பிடிங்க எல்லாம் புரியும்..’’ என்று கூறியிருக்கிறார்.
பதில் சொல்லுங்க அண்ணாமலை