News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கடந்த 10 ஆண்டு கால மோடியின் ஆட்சியில் ரயில்வே துறை ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் 2024 வரை 75 விபத்துகள் நடைபெற்று எக்கச்சக்க உயிர்கள் பறி போயிருக்கின்றன. இந்த விபத்துகளில் இருந்து அரசு எந்த பாடமும் படிக்கவே இல்லை, இப்படி விபத்துகள் ஏற்படுவதை விட தனியாரிடம் கொடுத்துவிடலாம் என்று மக்களே சொல்லும் நிலையை உருவாக்கி, அதானி கையில் ரயில்வே துறையை ஒப்படைக்கப் போகிறது மோடி அரசு என்பது தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநில தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மெயின் லைனில் சிக்னல் கொடுக்கப்பட்ட போதும் லூப் லைனில் சென்று நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. 2023 ஆம் ஆண்டு பாலசோர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தும் இப்படி தான் நடந்தது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோரமண்டல் ரயில் 150கி.மீ வேகத்தில் சென்றதால் 250 பரிதாபமாக பலியாகினர். பாக்மதி எக்ஸ்பிரஸ் 75 கி.மீ வேகத்தில் சென்றதால் உயிர்பலி ஏற்படவில்லை என்றாலும் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

தொடரும் விபத்துக்களுக்கு .தண்டவாளம் பராமரிப்பு இல்லாதது, சிக்னல் பராமரிப்பு இல்லாதது, மோதல் தடுப்பு கருவிகள் அனைத்து ரெயில்களிலும் பொறுத்தாதது, டிரைவர்கள் நியமனம் செய்யாமல், இருப்பவர்களை கூடுதலாக வேலை வாங்குவது., டிராக் மேன்கள் எண்ணிக்கையை குறைத்தது, சரக்கு மற்றும் பயணிகள் ரெயில்களுக்கு தனித்தனி பாதைகள் அமைக்கும் முடிவை கண்டுகொள்ளாதது போன்றவையே காரணங்கள்.  

இது குறித்துப் பேசும் காங்கிரஸார், ‘’ரயில் மோதல் தவிர்ப்பு கருவியை கவச் என்ற பெயரில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார்கள். 2022ல் 65 என்ஜின்களில் தான் அது பொருத்தப்பட்டிருந்தது. 4800 டீசல் இன்ஜின்கள், 8400 மின்சார எஞ்சின்கள் ஆக மொத்தம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட என்ஜின்கள் இருக்க 65 இன்ஜின்களில் மட்டும் இது பொருத்தப்பட்டது என்று ரயில்வே பாதுகாப்புக்கான நாடாளுமன்ற அறிக்கை ஒன்று கூறுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகை மறுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் என்ற பெயரில் ரயில் விடப்பட்டு கொள்ளை லாபம் அடிக்கப்படுகிறது. இவை எல்லாமே அதானிக்காக மோடி முன்கூட்டி செய்துவைக்கும் ஏற்பாடு. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக அதானிக்கு ரயில்வேயைக் கொடுத்துவிடுவார்கள்’’’ என்று எச்சரிக்கிறார்கள்.

உயிர் பலி ஏற்படவில்லை என்று இந்த விபத்தில் நிம்மதி அடைந்தாலும், அடுத்து எப்போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link