Share via:
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அழுத்தி அழுத்தி
சொன்ன பிறகும் எந்தக் கட்சியும் முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட் என்று பேச்சுவார்த்தை
நடக்கிறது என்று விஜய் கட்சியினர் குஷியாக இருந்தனர். ஆனால், காங்கிரஸ் பக்கமிருந்து
எந்த அசைவும் இல்லை என்றதும் விஜய் டீம் செம அப்செட்.
இப்போது விஜய் எதிர்பார்ப்பது எல்லாமே அவருக்கு ஆட்டோ சின்னம்
கிடைக்குமா என்பதுதான். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’சிறிது காலம் முன்னர்வரை
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு
ஒரே சின்னம் ஆணையம் வழங்கியுள்ளது. உபியில் சமாஜ்வாடி, ஆந்திராவில் தெலுங்கு தேசம்,
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மூவருக்கும் சைக்கிள் சின்னமே! ஆனால் 2025 ம் ஆண்டிற்கு
ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் ஆட்டோ சின்னம் இல்லை. அதை கேரளா காங்கிரஸ்(ம) எனும்
கட்சிக்கு வழங்கியுள்ளதாக தகவல்.
முந்தைய மேற்கோள்களைக் காட்டி தவெக ஆட்டோ சின்னம் பெற்றிட முயற்சி
செய்கிறது. அது மறுக்கப்பட்டால், இதுவரை ஒதுக்கப்படாத
சின்னங்கள் பட்டியலில் 182 ஆக விசில் (Whistle) சின்னம் இருப்பதால் தவெகவிற்கு விசில்
சின்னம் தந்திட வாய்ப்புகள் அதிகம்! பிகில் படமும் விசில் போடு பாடலும் கோடிக்கணக்கான
தமிழக மக்களிடம் அதிக பாப்புலராக இருப்பதால் விசில் சின்னம் வேண்டும் என்று நினைக்கிறார்…’’
என்கிறார்கள்.
விஜய்க்கு ஆட்டோ அல்லது விசில் கிடைக்குமா..?