Share via:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 16ம் தேதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி இன்று அதிகாலை முதல் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 33 ஏரிகள் முழுவதும் நிரம்பும் தருவாயிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளநிலையில் 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் சென்னையை பொறுத்தவரையில் 16 ஏரிகளில் 4 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதுடன், 12 ஏரிகள் 99 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், அடுத்தடுத்த கனமழையை தொடர்நதும் ஏரிகள் வேகமாக நிரம்பும் என்று நம்பப்படுகிறது.