News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ராணிப்பேட்டையில் தீபாவளி பண்டிகையின் போது நாட்டு பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த  மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் ரமேஷ். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண்குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

 

 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது ரமேஷ் தனது குடும்பத்தாருடன் இணைந்து மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது ரமேஷின் அண்ணன் நாட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தததாகவும், அந்த சமயம் பார்த்து ரமேஷின் 4 வயது குழந்தை அதன் அருகில் நின்றி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

நாட்டு பட்டாசு வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 4 வயது பெண் குழந்தை மீது வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த வாழைபந்தல் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link