Share via:
வருகிற 21ம் தேதி (திங்கட்கிழமை) 304 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் 2024& 2025ம் நிதி ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட 60 ஆயிரம் ரூபாய் சீர்வரிசை வழங்கி திருமணம் செய்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி வருகிற திங்கட்கிழமை (21ம்தேதி) சென்னை மாவட்ட கோவில்கள் சார்பாக 304 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. முதல்கட்டமாக திருவான்மியூரில் 31ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து சீர்வரிசை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதே நாளில் மாநிலம் முழுவதும் மீதமுள்ள 273 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.