Share via:
போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட வைத்து அதன்மூலம் பங்குச்சந்தைகளை
ஏற்றியும் இறக்கியும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஊழலில் ஈடுபட்டு
இருக்கிறார்கள் என்று மிகப் பெரிய குற்றச்சாட்டை ராகுல்காந்தி செய்தியாளர்கள் முன்பு வைத்திருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ஜூன் 4 ஆம் தேதிக்கு
முன் பங்குகளை வாங்கி குவியுங்கள்” என்று சிறிய முதலீட்டாளர்களைத் தூண்டினார்
அமித் ஷா. மே 19ம் தேதி, “ஜூன் 4 ஆம்
தேதி பங்குச் சந்தைகள் பழைய சாதனைகளை முறியடித்து முன்னேறும்” என்று பேசி பங்குகளை
வாங்கி குவிக்க சிறிய முதலீட்டாளர்களைத் தூண்டினார் நரேந்திர மோடி.
அதேபோல் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவின்போது பா.ஜ.க
கூட்டணி 360 முதல் 400 தொகுதிகளில் ஜெயிக்கும் என்று ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை
ஊடகங்கள் வெளியிடுகின்றன. ஜூன் 4 க்கு முன்பாக பங்குகளை வாங்கி குவிக்க சிறிய முதலீட்டாளர்களைத்
தூண்டுகின்றன மோடியின் ஜால்ரா ஊடகங்கள்.
ஜூன் 3 அன்று பங்குச் சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டும் போது
பங்குகளை வாங்கி குவிக்க சாதாரண மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெரும் கோடீஸ்வரர்கள்
பங்குகளை அதிக விலைக்கு விற்கிறார்கள்.
ஜூன் 4 அன்று பங்குச் சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சி. சிறிய முதலீட்டாளர்கள்
₹30 லட்சம்
கோடியை இழக்கின்றனர். நாட்டின் நடுத்தர வர்க்கம் (மோடி கூட்டத்தால்) மோசடி செய்யப்பட்டது.
இந்த பங்குச் சந்தை ஊழலில் சம்பந்தப்பட்ட பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஜால்ரா
ஊடகங்கள் மீதும் விசாரணை வேண்டும்’’ என்று குரல் கொடுத்தார்.
பிஜேபிக்கும், போலி கருத்துக்கணிப்புக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும்
என்ன தொடர்பு? எனவே இந்த ஊழலுக்கு எதிராக ஜேபிசி விசாரணையை நாங்கள் கோருகிறோம் என்று
கேட்டிருக்கிறார்.
மோடி பதவி ஏற்பதற்கு முன்னரே ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி போன்று
மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் ராகுல் காந்தி. இந்த விவகாரம் பெரும் புயலாக
மாறும் என்றே தெரிகிறது.