Share via:
கிட்டத்தட்ட 15 தொகுதிகள்
எதிர்பார்த்த நிலையில் ஒன்றே ஒன்று என்று தொகுதி கொடுத்திருக்கிறார்கள். அதில் நின்று
மக்களிடம் உள்ள ஆதரவைக் காட்டுவோம் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
ஏனென்றால் தொண்டர்கள்
பலமே இல்லாத ஜி.கே.வாசனுக்கு பா.ஜ.க.வில் 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அம்மா முன்னேற்றக்
கழகம் நடத்தும் டிடிவி தினகரனுக்கு 2 தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 3 எம்.எல்.ஏ.க்களை
கையில் வைத்திருக்கும் பன்னீருக்கு மட்டும் ஒரே ஒரு தொகுதியைக் கொடுத்து அவமானம் செய்திருக்கிறார்கள்.
அந்த அவமானத்தை துடைத்துப்
போட்டுவிட்டு, அந்த தொகுதியில் நின்றுவென்று காட்டுவோம் என்று கூறியிருக்கிறார் பன்னீர்செல்வம்.
இந்த முடிவு தமிழகம் முழுக்க வைரலாகி கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறது.
எனவே இதனை சமாளிப்பதற்கு
ஓ.பன்னீர்செல்வத்திம் மகன் ரவீந்திரநாத், ‘ஐயா எந்த முடிவு எடுத்தாலும் அது கழகத்தின்
நலன்… தொண்டர்களின் நலன்… தமிழக மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் இருக்கும்…
மோடியின் தலைமையில் புதிய இந்தியா… வலிமையான வல்லரசு இந்தியா… வளமான தமிழகம் உருவாக
ஒன்றுபடுவோம்… வென்று காட்டுவோம்… வரலாறு படைப்போம்’ என்று கூறியிருக்கிறார்.