Share via:
தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னைக்குள் வர 3 நாட்களுக்கு கண்டெய்னர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘‘சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நாட்களான வருகிற 9, 10, 11 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணிவரையில், சென்னைக்குள் கண்டெய்னர் லாரிகளை இயக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரி போக்குவரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிப்பட நேரிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சென்னைக்குள் வெளியூர் வாகனங்கள் வந்து செல்லும் 3 தேசிய நெடுஞ்சாலையில் இந்த 3 நாட்கள் தடை அமலில் இருக்கும். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைக்க தற்காலிக இடங்கள் ஒதுக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, சி.எம்.டி.ஏ.வுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.