Share via:
இரு மனம் இணையும் திருமணம் என்பது அவரவரின் சாதி, மொழி, இனம், மனம், நாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெவ்வேறு வகையில் நடத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொருவரின் திருமணமும் மற்றவர்களுக்கு வினோதமாக தோன்றுவதுண்டு. அவ்வளவு ஏன் இப்போதெல்லாம் திருமணம் கூட தேவையில்லை என்று சொல்லி லிவிங் ரிலேஷியன்ஷிப்பில் கூட சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண், பெண் திருமணம் என்பதை தாண்டி ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். எனக்கு எதற்கு இன்னொரு துணை என்று சிலர் தன்னைத்தானே கூட திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் 29 ஜோடிகள் நிர்வாணமாக உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் திருமணம் செய்து கொண்ட தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அதிசயமான திருமணங்கள் கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் அரங்கேறியுள்ளதாம்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் ஜமைக்காவில் ரன்வே என்ற பகுதியில் ஹெடோனிசம் ரிசார்ட்டில் முதல் முதலாக இந்த சேவை ஆரம்பமாகி தற்போது வரை நிர்வாண திருமணங்கள் நடந்து வருகிறதாம். வாழ்க்கையில் எப்போதும் சாகசத்தை விரும்புவர்களின் தேர்வாக இவ்விடம் உள்ளதாம்.
அந்த வகையில் கடந்த 2001ம் ஆண்டில் 8 ஜோடிகள் நிர்வாணமான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். அதைத்தொடர்ந்து 2003ம் ஆண்டு அதிகபட்சமாக 29 ஜோடிகள் இதே போல் நிர்வாண திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் நடந்த நிர்வாண திருமணத்தை பற்றி தெரிந்து கொண்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு தங்கள் துணையை அழைத்துச் சென்று நிர்வாணம் செய்து கொண்டதாக தெரிய வந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்த வகை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கணவன், மனைவி இருவரும் வெளிப்படையாக இருக்க வேண்டும். தங்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே இவ்வகை திருமணத்தை ஊக்குவிப்பதாக ரிசார்ட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற நிர்வாண திருமணங்கள் இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.