Share via:
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில். இக்கோவிலுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கடந்த செப்.23ம் தேதி சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த புகைப்படத்தில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், வசந்த கால தொடக்க நாளில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த நாளில் பகல் மற்றும் இரவு வேளைகள் சமகால அளவில் இருக்கும். ஆண்டில் இரண்டு நாட்களில் ஸ்ரீபத்மநாசுவாமி கோவில் கோபுரத்தில் ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் சூரியனின் ஒளி தொடர்ச்சியாக தோன்றுகிறது. அந்த 2 நாட்களில் இன்றைய தினம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
260 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோபுரம் எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் மீண்டும் கட்டப்பட்டது. சூரியனின் பயண திசைக்கு ஏற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சூரிய உதயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சேர்த்து, சூரியன் மறையும் போது சூரிய ஒளி 4வது ஜன்னல் வழியாக தெரியும் வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
எம்.பி.சசிதரூர் இது குறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதவிட்ட நிலையில் 14 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு தங்களின் ஆச்சரியமான உணர்வுகளை பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

