Share via:
இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பின் 21வது சர்வதேச திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று (டிச.14) தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் 21வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கப்பட்டது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் இத்திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில் நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்தோசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பின் துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச் செயாளர் இ.தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கப்பட்ட இத்திரைப்பட விழா வருகிற 21ம் (டிசம்பர்)தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு 50 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவுக்காக தமிழக அரசு ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
சத்யம், சாந்தம், சேரின் ஸ்கிரீன்ஸ், சீசன், 6 டிகிரி மற்றும் அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் தினசரி 5 காட்கிகள் என திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அதன்படி இப்போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர்த்தொழில், ராவணக்கோட்டம், செம்பி, விடுதலை உள்ளிட்ட 12 தமிழ்த்திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்நாளான நேற்று அர்ஜெண்ட் கட் ஆப் (ஈரான்), திபாத் ஆப் எக்செலன்ஸ் (பிரான்ஸ்), அன்லெதர் ஜாக்கெட் (ஈரான்) உள்ளிட்ட சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டன.