சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 7.2.20224 முதல் 13.2.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 52 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள் இருச்சக்கர வாகனம் மற்றும் பணம பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021 முதல் நடப்பாண்டு வரையிலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 876 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,871 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் சேகரித்து 922 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் 1.1.2024 முதல் 13.2.2024 வர கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 23 குற்றவாளிகல் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனை தீவிரம் அடையும் என்று காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link