Share via:
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் யானை மிதித்து யானைப்பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உதயா என்ற பாகன் அங்கிருக்கும் தெய்வானை என்ற பெண் யானைக்கு பாகனாக இருந்து அதனை பராமரித்து வருகிறார். இந்நிலையில் யானைக்கு பழம் கொடுக்க வந்த போது பாகன் உதயாவையும் அவருடன் வந்தவரான உறவினரான கிருஷ்ணபாலன் என்பவரை தெய்வானை யானை 2 பேரையும் கீழே தள்ளி மிதித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கோவில் யானையை யாரேனும் சீண்டினார்களா? அல்லது செல்ஃபி எடுக்க சென்று அச்சுறுத்தினார்களா? அல்லது யானைக்கு மதம் பிடித்துவிட்டதா என்று பல்வேறு கோணங்களில் போலீசாரும், வனத்துறையினரும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.