Share via:

அண்ணா பல்கலைக்கழகம்
மாணவி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் டீம் வரலட்சுமி
நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று தானாக முன் வந்து விசாரித்தது உயர்நீதிமன்றம்..
போலீஸாருக்கும் அரசுக்கும்
கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரிக்க
3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, உத்தாவிட்டுள்ளது. நீதிமன்றம் கண்காணிப்பில்
விசாரிக்க முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. ஏனேன்றால் அண்ணா நகர் சிறுமி பாலியல்
வழக்கில் உச்சநீதிமன்றம் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க சொல்லி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு நிர்வாகம்
மீது நம்பிக்கை இல்லாமல் தொடர்ந்து நீதிமன்றங்கள் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து,
நீதிமன்றங்கள் கண்காணிப்பில் விசாரிக்க சொல்வது மாநில அரசின் நிர்வாகத் தோல்வி என்றே
சொல்லப்படுகிறது.
அதேநேரம், எஃப்.ஐ.ஆர்
குறித்து காவல் துறை கூறிய விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி முதல் தகவல்
அறிக்கையை 14 பேர் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கும் செய்துள்ளனர் அவர்கள் யார் என்று
கண்டுபிடித்துவிட்டோம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி
அளித்திருக்கிறது.
எஃப்.ஐ.ஆர். பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு
உத்தரவு போட்டவர்கள் யார் என்றும் அவர்களுடைய பிரதான நோக்கம் என்ன என்பதும் கண்டறிந்து
மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஒருவரையும் சும்மா விடக்கூடாது.