Share via:

மத்தியபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவன், தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நவீன யுகத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதில வரும் பல்வேறு காணொளிகளை பார்த்து பார்த்து இளம்வயதிலேயே மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். கல்வியில் கவனக்குறைவு ஏற்பட்டு ஒரு செயலின் வீரியம் மற்றும் பக்கவிளைவு தெரியாமல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் போதை உள்ளிட்ட தீயப்பழக்கத்திற்கும் ஆளாகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் மத்தியபிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
சத்தர்பூர் மாவட்டத்ததில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 55 வயதான எஸ்.கே.சக்சேனா என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 6) மதியம் 1.30 மணியளவில் பள்ளியின் கழிவறை அருகே சக்சேனா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரை 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் நண்பருடன் சேர்ந்து தலையில் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளான். தலையில் பலத்த காயமடைந்த சக்சேனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தலைமறைவான மாணவனையும், அவனது நண்பனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் சக மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.