Share via:
இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருக்கிறது. எல்லோருடைய கைகளிலும்
செல்போன் இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்புக்கு பணம் ஒதுக்கியது முட்டாள்தனமான
யோசனை என்று அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் எக்கச்சக்க நல்ல திட்டங்கள் இருக்கிறது
என்பதால், அதை மக்கள் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வகையில் தமிழகம் முழுவதும் 900+ இடங்கள் ஒளிபரப்புக்கு ₹10 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாமே வீணாகப் போயிருக்கிறது. டென்டு வாடகை நாற்காலிகள் இணைய வசதி ஸ்க்ரீன்கள்,
புரொஜெக்டர்கள் போக்குவரத்து செலவுகள் என்று மக்களின் வரிப்பணத்தை இப்படி குப்பையில்
போடலாமா ஸ்டாலின்..? யார் கொடுத்த ஐடியா இது..?