News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

ஒரே வாரத்தில் ஈரானை மண்டியிட வைத்துவிடுவோம் என்று போருக்குக் கிளம்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இப்போது ஆப்பசைத்த குரங்கு போன்று மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.

ஈரானுக்கு எதிரான போர் ஐந்து வாரங்களைக் கடந்து ஆறாவது வாரத்தில் நுழைந்துவிட்டது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை’ துல்லியமானதாக இல்லை. அதேநேரம், ஈரான் தொடுக்கும் பதில் தாக்குதல்களால் வளைகுடா நாடுகள் முடங்கியுள்ளன, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் அயதுல்லா அலி கொமேனி கொல்லப்பட்டது தவிர, வேறு எதையும் அமெரிக்கா சாதிக்கவில்லை. ஈரான் உடனடியாகப் பணியாது என்பதையும், அமெரிக்காவுக்குப் பின் எந்த நாடும் அணி திரளவில்லை என்பதும் அந்த நாட்டுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாகிவிட்டது.

போர், போர் என்று வீர ஆவேசம் பேசிக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது அமைதி… அமைதி… என்று பேசுகிறார். ஈரான் அரசு நாங்கள் சொல்வதைக் கேட்டால் மட்டுமே போர் நிறுத்தம் என்று 10 நிபந்தனைகள் விதித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் நாளை அதாவது ஏப்ரல் 11ம் தேதி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உயர் மட்ட நேரடி பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. இந்த பேச்சு ஈரான் போருக்கு நிரந்த தீர்வு காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் செய்ய விரும்பவில்லை என்று என்றாலும், தங்கள் நாட்டின் உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றி எப்போதும் நிற்கும் என்று பேசி பேச்சுவார்த்தைக்கு உலை வைக்கிறார்.

ஈரானுக்குப் பின்னே சீனாவும் ரஷ்யாவும் நிற்பது தெரிந்தும் ட்ரம்ப் மேலும் மேலும் தப்பு செய்துகொண்டே இருக்கிறார். இதனால் உலகம் முழுவதும் பொருளாதாரச் சிக்கல் உருவாகத் தொடங்கியிருக்கிறது. 

குரங்கு கையில் பூமாலை போன்று ட்ரம்ப் கையில் அமெரிக்கா சிக்கிக்கொண்டு, உலக மக்களை சின்னாபின்னமாக்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link