Share via:
கிளம்பாக்கத்திற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, மேலதிக வேலைகள்
மளமளவென நடந்துவருகின்றன. வட சென்னை மற்றும் தென் சென்னை மக்கள் அதிக சுமையுடன் ஊருக்குள்
செல்லவேண்டியிருப்பதால், கடுமையான நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு விமர்சனங்கள்
இருந்துவந்தாலும், எல்லா பிரச்னைகளியும் தீர்ப்பதற்கு பணிகள் நடந்துவருவதாக அமைச்சர்
சேகர்பாபு கூறிவருகிறார்.
இன்னும் 10 நாட்களுக்குள் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி
செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்திருப்பவர், அடுத்தபடியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில்
ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்.
அமைச்சரின் பேச்சையொட்டியே, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு மற்றும் சுற்றியிருக்கும்
இடங்களை கொண்டு தலைமைச் செயலகத்தை அங்கு கொண்டுசெல்லும் ஏற்பாடுகள் நடக்க இருப்பதாக
தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது தலைமைச் செயலகம் கடும் நெருக்கடியுடன் செயல்பட்டு வருகிறது.
கருணாநிதி ஆசையாகக் கட்டிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றிவிட்டார்.
ஆகவே, கருணாநிதி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஸ்டாலின் அடுத்தகட்ட முயற்சி மேற்கொள்வார்
என்றே தெரிகிறது.
ஆகவே, சட்டசபையை மாற்றுவதற்கான ஆக்கபூர்வ ஆய்வுகள் நடப்பதாகத்
தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவில் போதுமான இடமும் வசதியும் இருப்பதாக தெரியவந்தால்
உடனடியாக தலைமைச் செயலகத்தை மாற்றும் பணி தொடங்கும் என்றும் தெரியவருகிறது.
வெயிட பண்ணுவோம்