News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

 

சனாதனம் பேசி பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களையும் அலறவிட்ட உதயநிதி, அடுத்தபடியாக மத்திய அமைச்சருக்குப் பதிலடியாக அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் என்று பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

அ.தி.மு.க.வின் எடப்பாடி தி.மு.க. அரசை விமர்சனம் செய்ததும், மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கித்தருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ய வேண்டும் என்று பேசினார் உதயநிதி.

அதேபாணியில் இப்போது மத்திய அமைச்சருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.  மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலின் 5000 கோடி ரூபாய் நிதி கேட்டார். ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறுமனே 450 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியது. 

இத்தனை குறைவான பணமா என்று தி.மு.க.வினர் கொந்தளித்த நேரத்தில் மத்திய அமைச்சர், ஏடிஎம் மிஷினா வைத்திருக்கிறோம் என்று கொதித்தார்.

இதுகுறித்து உதயநிதியிடம் கேட்டதற்கு, ‘அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே… மத்த மாநிலங்களுக்கு எல்லாம் கேட்காமலே கொடுக்கிறீங்கள்ல, தமிழ்நாட்டை மட்டும் ஏன் தனியா பார்க்குறீங்க…’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த பதிலடியை தி.மு.க.வினர் பாராட்டிவரும் வேளையில் பா.ஜ.க.வினரும் மத்திய அரசும் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் உளறல் பேச்சை நிறுத்துவதற்காக அமலாக்கத்துறை ரெய்டு பாயப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Share via
Copy link