Share via:
நிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்த மழைவெள்ள நீர் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள், பள்ளி புத்தகங்கள் என பொருட்கள் நாசமானது.
இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்காக டோக்கன் வருகிற 16ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச.14) மதியம் முதல் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
நிவாரண நிதி வழங்குவது குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரம் உங்களுக்காக:&
* ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் நிவாரண தொகை விநியோகிப்பதற்காக 4 பேர் பணியமர்த்தப்பட வேண்டும்.
* வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிச.17) முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
* ஞாயிற்றுக்கிழமை முதல் 7 நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும்.
* டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே நேரில் சன்று வழங்க வேண்டும். மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
* டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் குடும்ப அட்டையுடன் வருபவர்களை எந்த காரணத்தை முன்னிட்டும் ரொக்கத் தொகை கொடுக்காமல் திருப்பி அனுப்பக்கூடாது.
* காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம்3 மணி முதல் மாலை 5 மணிவரையில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
* பயோமெட்ரிக் முறையில் நிவாரணத் தொகை வழங்கப்பட வேணடும்.
* நிவாரணத் தொகை வழங்கப்பட்டதும் ரேஷன் அட்டைதாரருக்கு கைப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
Copyright © 2023. All Rights Reserved.