Share via:
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆர்.என்.ரவி தன்னிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை காரணம் கேட்டு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். அப்படி திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை சடடமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றம் செய்யும் வகையில் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு. இவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநரே நிறைவேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தவறு என்றும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படியோ ஆளுநர் தமிழக அரசின் வழிக்கு வந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
Copyright © 2023. All Rights Reserved.