விஜய் கட்சிக்கு சின்னம் ரெடி. செங்கோட்டையன் மீண்டும் ஃபெயில்

சமீபத்தில் மேடையில் பேசிய செங்கொட்டையன், ‘தவெக சின்னத்தைப் பார்த்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார். அது என்ன சின்னம் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் ஈரோட்டில் அவர் தேர்வு செய்யும் இடங்கள் எல்லாமே அரசினால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவது சிக்கலாகிவருகிறது. வரும் தேர்தலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் உட்பட 10 சின்னங்கள் கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது. ஆட்டோ அல்லது விசில் சின்னத்துக்கு பலரும் ஆதரவாக இருக்கும் நிலையில், விஜய்க்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது, எளிதில் எல்லோரிடமும் கொண்டுபோய் […]
விஜய் கூடாரத்தில் பிஞ்ச செருப்பு நாஞ்சில் சம்பத்… சர்வே ட்விஸ்ட்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 வெற்றிகளைப் பெற்றது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளைக் குறி வைத்திருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டில் இன்று 2 மணி நேரம் ரகசியமாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத் விஜய்யை சந்தித்து […]
சீமானும் விஜய்யும் எங்கே போனார்கள்.? திருப்பரங்குன்றத்திற்கு சைலன்ட்

முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன் என்று ஆவேசக்குரல் எழுப்பிவந்த நாம் தமிழர் சீமான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்கமாமல் வேடிக்கை பார்ப்பது அவரது கட்சிக்குள்ளே குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திருமுருகன் காந்தி, ‘’திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது டில்லி-ஆரிய-சமஸ்கிருத கும்பல் நடத்தும் […]
பாஜகவுக்கு பதுங்கிட்டாரே விஜய்.? கிண்டலடிக்கும் நாம் தமிழர்

தமிழகத்தில் ரோட் ஷோ நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் புதுவையில் எப்படியும் அனுமதி பெற்றுவிடலாம் என்று புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. திமுகவின் முகத்தில் கரியைப் பூசுவது போன்று புதுவையில் ரோடு ஷோ நடத்த தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் மைக்கில் பேசவும் அனுமதி கேட்டார். புஸ்ஸி ஆனந்த் […]
செங்கோட்டையன் பாணியில் பன்னீர்..? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

செங்கோட்டையன் கட்சியில் சேர்க்கப்பட்டதும் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் அடுத்து ஓ.பன்னீர்செல்வமும் கே.பி.முனுசாமியும் வருகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ந்து நிற்கிறார்கள். விஜய் கட்சியில் ஊழல் பெருச்சாலிகள் இருந்தால் எப்படி ஓட்டு கேட்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்ற செங்கோட்டையனின் ஒருங்கிணைப்புக் குரல் அதிமுகவில் எடுபடவில்லை. எனவே, கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய் தலைமையில் செயல்பட்டு […]
உதயநிதி பிறந்த நாளை காலி செய்த விஜய்.. ஜனநாயகன் Vs நிஜநாயகன்

இன்று உதயநிதியின் பிறந்த நாள். இதை கொண்டாட திமுகவினர் தீயாக வேலை செய்துவந்தனர். திமுக ஐடி விங் சார்பில், ‘கழகத் தலைவரின் திராவிட மாடல் அரசுக்குத் தூணாய் துணை நிற்கும் துணை முதலமைச்சர், அறிவுத் திருவிழா நடத்திய ஆற்றல்மிக்க இளம் தலைவர், கருத்தியல் களங்களில் கொள்கை வீரர்களைத் தயார் செய்யும் கழக இளைஞர் அணிச்செயலாளர், உதயநிதிக்கு 49-வது பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம்…’’ என்று கொண்டாட்ட அறிவிப்பு வெளியிட்டார்கள். தமிழகமெங்கும் ஜனநாயகனுக்கும் நிஜநாயகனுக்கும் போட்டி என்று […]
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செங்கோட்டையா..? விஜய் ரசிகர்களுக்கு குஷி

விஜய் கட்சிக்கு செங்கோட்டையன் வந்தே சேர்ந்துவிட்டார். செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களும் வணக்கம் தெரிவித்திருக்கிறார். அதோடு செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மஞ்சள் சிகப்பு துண்டை அணிவித்து வரவேற்றார். விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி உறுப்பினர் அட்டையை தனது கை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுகிறது. அத்துடன் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படுகிறது. […]
விஜய் கட்சியில் செங்கோட்டையன்… என்ன பொறுப்பு தெரியுமா..?

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று இத்தனை காலமும் காத்திருந்த ஓ.பி.எஸ் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டார். அந்த கட்சியில் செங்கோட்டையன் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜய் கட்சியில் சேர்வது உறுதியாகிவிட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் எனும் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். பாஜக […]
வீட்டுக்கு ஒரு பைக் இலவசம்…? விஜய் தேர்தல் அறிக்கை முன்னோட்டம்.

இலவசங்களே இல்லாத தேர்தல் அறிக்கையே எங்கள் நோக்கம் என்ற விஜய் இப்போது எல்லோருக்கும் வீடு, கல்வி, பைக் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசியிருக்கும் நடிகர் விஜய், ஒர் எலைட் அரசியல்வாதி போன்று வீட்டுக்கு ஒரு பைக் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. வீட்டுக்கு ஒரு பைக் தரப்போகிறார் விஜய் என்று ரசிகர்கள் குஷியாகிறார்கள். இதுகுறித்து பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’மீண்டும் மீண்டும் சினிமா […]
விஜய்க்கு காங்கிரஸ் ஆப்ஷன் காலி… காஞ்சிபுரத்தில் திக் திக்

விஜய்யுடன் ராகுல்காந்தி பேசிவிட்டார், மாஸ் கூட்டணி உறுதி என்று தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கூறிவந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழுவையே காங்கிரஸ் அமைத்துவிட்டது. இந்நிலையில் நாளை காஞ்சிபுரம் கூட்டம் நடக்குமா, நடந்தால் என்னாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘’தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் ‘இந்தியா கூட்டணி’ யின் […]

