எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேணும், இபிஎஸ் வேண்டாமா..? விஜய்க்கு எச்சரிக்கை

ஈரோடு கூட்டத்தை முடித்த கையோடு த.வெ.க வின் அடுத்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி 2026 முதல் வாரம் சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் கோட்டை என்பதால், செங்கோட்டையன் இங்கு திட்டமிட்டு அடுத்த கூட்டம் நடத்துகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதையடுத்து விஜய் மீது அதிமுகவும் பாயத் தொடங்கிவிட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனி அடையாளமும் கொள்கை தெளிவும் இருக்க வேண்டும். ஆனால், அந்த […]
1 கோடி வாக்காளர்கள் அவுட். நடுக்கத்தில் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது மிகச்சரியாக 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை விட கிட்டத்தட்ட 40% மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார் மாநிலத்தில் மொத்தமே 65 லட்சம் வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1 கோடி பேர் நீக்கம் என்பது திமுகவுக்கு மிகப்பெரும் சிக்கல் என்கிறார்கள். இது குறித்துப் பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’தமிழ்நாட்டில் […]
காந்தி திட்டத்துக்கு மூடு விழா..? காங்கிரஸ் போராட்டம் எடுபடுமா.?

காந்தியின் பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலைத் திட்டத்துக்கு புதிய பெயர் சூட்டி நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றிவிட்டது. இதற்கு அதிமுக துணை போயிருக்கிறது. விவசாய சட்டம் போன்று இதனை வாபஸ் பெறுவதற்குப் போராடுவோம் என்று காங்கிரஸ் கொதிக்கிறது. ஆனால், எடுபடுமா என்பதுதான் விடை தெரியாத கேள்வி. காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா…. கூட்டணிக்குத் தயாராகிறாரா விஜய்..?

கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் இல்லாத அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எல்லாம் ஈரோடு மீட்டிங்கில் விஜய் பேசியிருப்பது புதிய கூட்டணிக்கான அடித்தளம் என்கிறார்கள். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில், விஜயமங்கலம் பகுதியில் உள்ள சரளையில் தவெக கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்திருந்தார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார். இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “செங்கோட்டையன் […]
கொங்குவில் விஜய்க்குக் கட்டுக்கடங்காத கூட்டம். சேதாரம் யாருக்கு?

விஜய் கலந்துகொள்ளும் மாபெரும் பிரசாரக் கூட்டத்திற்கு அதிகாலை 6 மணி முதலே ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். வெளியேறும் நேரத்தில் பிரச்னை இல்லாமல் முடிக்கவேண்டும் என்று தவெக தலைவர்களும் போலீஸாரும் எக்கச்சக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் நடைபெறுகிறது. செங்கோட்டையன் பலத்தைக் காட்டும் வகையில் இன்று ஈரோட்டில் மெகா கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு உட்கார சேர் போடவில்லை என்பது பெரும் சலசலப்பாக மாறினாலும், ரசிகர்கள் அதற்காக கவலைப்படவில்லை. விஜய் […]
ஆண்களுக்கு குவார்ட்டர், பெண்களுக்கு தங்கம்… தயாராகிறது திமுக தேர்தல் அறிக்கை

தேர்தல் சூடுபிடித்துவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் 11 கொண்ட குழுவை அமைத்துள்ளது திமுக. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு துறை சார்ந்தோரிடமும் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று திமுகவும் 10% கூட நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. இந்நிலையில் வரும் தேர்தலுக்கு திமுக என்னவெல்லாம் அறிக்கையில் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று பல்வேறு யூகங்கள் […]
உசுரு முக்கியம் விஜய்…. தமிழ்நாட்டு போலீஸ்க்கு ஒத்துழைப்பு கொடுப்பாரா..?

கரூர் பிரசாரத்தில் காலம் தாழ்த்தி கிளம்பிய விஜய், புதுவைக் கூட்டத்துக்கு சரியான நேரத்தில் ஆஜரானார். அதனால் எந்த அசம்பவிதமும் நடக்கவில்லை. இதையடுத்து 18ம் தேதி கூட்டத்துக்கு சரியான நேரத்துக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையத்தில் தவெக தலைவர் விஜய், நாளை மறுதினம் காலை 11.00 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை வாகனத்தில் உரையாற்றவுள்ளார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் யாரும் வர […]
ஸ்டாலினுக்கு தங்க சிம்மாசனம் இல்லையா..? என்ன ரேட் தெரியுமா..?

திருவண்ணாமலை திமுக வழங்கிய வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாகக் ‘கால் மேல் கால்’ போட்டு அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் கடும் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. திருவண்ணாமலை மலைப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த […]
சீமான் கைது ஆவாரா..? திமுக நபருக்கு கும்மாங்குத்து

காருக்கு வழிவிடாமல் போன வழக்கறிஞரை திருமாவளவனின் ஆட்கள் அடித்து உதைத்தார்கள். அதே பாணியில் எதிர்ப்பு கோஷம் போட்ட திமுக பிரமுகரை சீமானே காரில் இருந்து இறங்கி அடித்துள்ளார். அதோடு நாம் தமிழர் தம்பிகளும் அடி பொளந்து கட்டியிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சர்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சீமான் […]
கேரளாவில் பாஜக வந்தாச்சு. கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவுரை..?

பாஜகவால் நுழையவே முடியாத இரண்டு மாநிலங்கள் என்று கேரளா மற்றும் தமிழ்நாட்டை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தை பாஜ கைப்பற்றிவிட்டது. அடுத்து தமிழகம்தான் என்று தாமரைக் கட்சியினர் குஷியாகிறார்கள். இந்த தோல்வி குறித்து அரசியல் ஆர்வலர்கள், ‘’ஒருபுறம் அதானி, அம்பானிகளை வசைபாடிக் கொண்டே, மறுபுறம் தாங்கள் ஆளும் கேரளாவில் அதே அதானி, அம்பானிகளுக்கு வெண்சாமரம் வீசுவது, தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே, தங்கக் கடத்தலில் ஈடுபடுவது, இந்திய பங்கு சந்தையை விமர்சித்துக் கொண்டே, வெளிநாட்டு […]

