News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

செம குஷியில் செங்கோட்டையன்… ஆப்பு வைக்கும் எடப்பாடி

தவெகவில் சேர்ந்த கையோடு கோவைக்கு வந்த செங்கோட்டையனுக்கு விமான நிலையத்தில் செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை எதிர்பார்க்காத செங்கோட்டையன் குஷியாகியிருக்கிறார். இந்நிலையில் நாளை கோபிசெட்டிப்பாளையத்தில் இபிஎஸ் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதில் செங்கோட்டையனுக்கு செம ரெய்டு விழும் என்கிறார்கள். இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர், ‘’கோவையில் செங்கோட்டையன் ஆண்டவர்களே மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.  ஒரே தொகுதியில மீண்டும் மீண்டும் 9 முறை எம் எல் ஏ வாகவும், அமைச்சராவும் இருந்த ஒருவர் […]

தொழிலாளர் சட்டத்துக்கு வெண்குடை வேந்தர் ஸ்டாலின் கப்சிப். கண்சிவக்கும் கம்யூனிஸ்ட்கள்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடந்த வாரம் 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை  வெளியிட்டது.  29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து இந்த சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  இதிலுள்ள பல்வேறு அம்சங்கள் தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாக இருப்பதாக கூறி இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை அமைதி காப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டம் அறிவிப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. பாஜக அரசின் புதிய தொழிலாளர் […]

செங்கோட்டையன் பாணியில் பன்னீர்..? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

செங்கோட்டையன் கட்சியில் சேர்க்கப்பட்டதும் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் அடுத்து ஓ.பன்னீர்செல்வமும் கே.பி.முனுசாமியும் வருகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ந்து நிற்கிறார்கள். விஜய் கட்சியில் ஊழல் பெருச்சாலிகள் இருந்தால் எப்படி ஓட்டு கேட்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்ற செங்கோட்டையனின் ஒருங்கிணைப்புக் குரல் அதிமுகவில் எடுபடவில்லை. எனவே, கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய் தலைமையில் செயல்பட்டு […]

உதயநிதி பிறந்த நாளை காலி செய்த விஜய்.. ஜனநாயகன் Vs நிஜநாயகன் 

இன்று உதயநிதியின் பிறந்த நாள். இதை கொண்டாட திமுகவினர் தீயாக வேலை செய்துவந்தனர். திமுக ஐடி விங் சார்பில், ‘கழகத் தலைவரின் திராவிட மாடல் அரசுக்குத் தூணாய் துணை நிற்கும் துணை முதலமைச்சர், அறிவுத் திருவிழா நடத்திய ஆற்றல்மிக்க இளம் தலைவர், கருத்தியல் களங்களில் கொள்கை வீரர்களைத் தயார் செய்யும் கழக இளைஞர் அணிச்செயலாளர், உதயநிதிக்கு 49-வது பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம்…’’ என்று கொண்டாட்ட அறிவிப்பு வெளியிட்டார்கள். தமிழகமெங்கும் ஜனநாயகனுக்கும் நிஜநாயகனுக்கும் போட்டி என்று […]

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செங்கோட்டையா..? விஜய் ரசிகர்களுக்கு குஷி

விஜய் கட்சிக்கு செங்கோட்டையன் வந்தே சேர்ந்துவிட்டார். செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களும் வணக்கம் தெரிவித்திருக்கிறார். அதோடு செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மஞ்சள் சிகப்பு துண்டை அணிவித்து வரவேற்றார். விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி உறுப்பினர் அட்டையை தனது கை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுகிறது. அத்துடன் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படுகிறது. […]

விஜய் கட்சியில் செங்கோட்டையன்… என்ன பொறுப்பு தெரியுமா..?

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று இத்தனை காலமும் காத்திருந்த ஓ.பி.எஸ் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டார். அந்த கட்சியில் செங்கோட்டையன் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜய் கட்சியில் சேர்வது உறுதியாகிவிட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் எனும் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். பாஜக […]

ஓபிஎஸ் புதுக் கட்சி… அதிமுக ஓட்டுக்கு ஆபத்து..?

தர்மயுத்தம் நடத்திய பிறகு தள்ளாட ஆரம்பித்த ஓபிஎஸ் இன்னமும் உருப்படியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சிக் கரை வேட்டி கட்டமுடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் வரும் தேர்தலை முன்னிட்டு புதிய கட்சி உதயமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உரிமை மீட்பு குழு இன்று முதல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும் […]

சீமானுக்கு என்னாச்சு…? தேர்தல் கமிஷன் நடைமுறை தெரியாதா?

எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கொடுக்கும் சீமான் தேர்தல் கமிஷன் நடைமுறையைப் புரிந்துகொள்ளமால், செய்தியாளர்களை வாடா, போடா என்று பேசியிருப்பது மீடியாக்களை அதிர வைத்திருக்கிறது. மனநிலை தடுமாறியவர் போன்று சீமான் பேசியிருப்பதாக விமர்சனம் வருகிறது. புதுவையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் கலைஞர் டிவி செய்தியாளர் ராஜிவ் எழுப்பிய கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் அவர் மீது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பாய்ந்துள்ளார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் காலதாமதம் செய்யப்படுவதாக […]

வீட்டுக்கு ஒரு பைக் இலவசம்…? விஜய் தேர்தல் அறிக்கை முன்னோட்டம்.

இலவசங்களே இல்லாத தேர்தல் அறிக்கையே எங்கள் நோக்கம் என்ற விஜய் இப்போது எல்லோருக்கும் வீடு, கல்வி, பைக் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசியிருக்கும் நடிகர் விஜய், ஒர் எலைட் அரசியல்வாதி போன்று வீட்டுக்கு ஒரு பைக் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. வீட்டுக்கு ஒரு பைக் தரப்போகிறார் விஜய் என்று ரசிகர்கள் குஷியாகிறார்கள். இதுகுறித்து பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’மீண்டும் மீண்டும் சினிமா […]

மீண்டும் அண்ணாமலை…? ஆத்திரத்தில் நயினார் அதிர்ச்சியில் எடப்பாடி

கோவைக்கு பிரதமர் வந்துவிட்டு சென்ற பிறகு அண்ணாமலை இரண்டு முறை பிரஸ்மீட் கொடுத்துவிட்டார். நயினார் தலைவராக வந்தபிறகு அமைதியாக இருந்த அண்ணாமலை மறுபடியும் தனி ஆவர்த்தனம் தொடங்கியிருப்பது நயினார் மற்றும் எடப்பாடிக்கு எரிச்சலைக் கொண்டுவந்திருக்கிறது. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்று திருமண விழாவில் அண்ணாமலையும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சந்தித்துக்கொண்ட விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. அமமுகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது மணமக்களை […]