எடப்பாடி வேட்டைக்குக் கிளம்பிவிட்டார். பொதுக்குழு பரபரப்பு

2026 தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுக்குழுவின் தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.வளர்மதி பேச்சு வைரலாகியுள்ளது. இன்றைய பொதுக்குழுவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ‘’புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பற்றி பேசாமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது. சத்துணவு இருக்கும்வரை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயர் இருக்கும். தாலிக்கு தங்கம் என்று சொல்லுகிற […]
ஸ்டாலினுக்கும் பாஜகவுக்கும் அண்டர்கிரவுண்ட் டீலிங்..? நேரு கிரேட் எஸ்கேப்

அமலாக்கத்துறை தமிழகத்தில் நுழைவதும் உடனடியாக திமுகவினர் டெல்லிக்குப் போவதும் தொடர்ந்து நடப்பதைப் பார்க்கையில் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையில் அண்டர்கிரவுண்ட் டீலீங் இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. ஏனென்றால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்ததும், ஜனவரி 5 ஆம் தேதி துரைமுருகன் டெல்லி பயணமானார். ஏப்ரல் மாத இறுதியில் டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் மே மாதம் செந்தில் பாலாஜி டெல்லிக்குப் பயணம் செய்தார். இவர்களைக் […]
இண்டிகோ பஞ்சாயத்து. மோடியின் மானம் காற்றில் பறக்குது.

ஏழாவது நாளாக இண்டிகோ விமானம் பறக்காத காரணத்தால், உலகம் முழுக்க பயனாளர்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத மோடியின் மானம் காற்றில் பறக்கிறது. சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை, புறப்பாடு என மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், பிற ஏர்லைன்ஸ் விமானங்களை நாடும்போது, அதன் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். […]
அமைச்சர் நேரு பதவி பறிக்கப்படுமா..? அமலாக்கத்துறை திகில் ஆதாரங்கள்

வேலைக்கு லஞ்சம், ஹவாலா பரிவர்த்தனை என அமைச்சர் நேரு 1,020 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாட்டின் தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை ஒரு புதிய கடிதம் எழுதியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து அமைச்சர் நேரு பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வழங்கப்பட்ட 2,538 பணி நியமன ஆணைகளில் சிலருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக […]
அன்புமணியை ஜெயிலுக்கு அனுப்பும் ராமதாஸ்..? நீதிமன்றத் தீர்ப்பு திருப்பம்

தேர்தல் ஆணையத்தை போலி ஆவணங்கள் மூலம் அன்புமணி ஏமாற்றியிருக்கிறார் என்று டாக்டர் ராமதாஸ் கொடுத்திருக்கும் புகார் பாமக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. அதோடு, தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் விளக்கமும் தங்களுக்கு சாதகமானது என்று ராமதாஸ் குரூப் கொண்டாடுகிறது. கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் […]
ஸ்டாலினுக்காக துர்காவின் ஒட்டக பூஜை… சபாஷ் சரியான பகுத்தறிவு

கோமாதா, கோமியம் என்றாலே திராவிடக் கட்சிகளுக்கு ஆகாது. மாட்டைத் தொழுவதையும் பூஜை செய்வதையும் மூட நம்பிக்கை என்று கிண்டலோ கிண்டல் செய்வார்கள். அதேநேரம், துர்கா ஸ்டாலினும் சேகர் பாபுவும் கோயில் கோயிலாக சுற்றித் திரிகிறார்கள். கார்த்திகை தீபம் விளக்கு ஏற்றுவதை தடுத்த காரணத்தால் ஸ்டாலினுக்கு தோஷம் வந்துவிட்டதாம். இதைத் தடுப்பதற்காக ஒட்டகத்துக்குப் பூஜை செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின். இதற்காக ஒட்டகம் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி சமாதியில் பொங்கல், வடை வைத்து வழிபடும் உடன்பிறப்புகள் இதற்கும் […]
விஜய் கூடாரத்தில் பிஞ்ச செருப்பு நாஞ்சில் சம்பத்… சர்வே ட்விஸ்ட்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 வெற்றிகளைப் பெற்றது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளைக் குறி வைத்திருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டில் இன்று 2 மணி நேரம் ரகசியமாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத் விஜய்யை சந்தித்து […]
தேர்தலுக்கு 100 வேட்பாளர்கள் அறிவிப்பு. சீமானுக்கு எந்த தொகுதி..?

ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக, புதிதாக வந்த தவெக போன்ற மூன்று கட்சிகள்ம் கூட்டணிகள் அமையாமல் காத்திருக்கும் நிலையில், சீமான் 100 வேட்பாளர்களை அறிவித்து அசத்தியிருக்கிறார். விழுப்புரம் தொகுதியில் பெண் மருத்துவர் அபிநயா, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. கூட்டணி பொறுத்தவரை திமுகவில் இருக்கும் கட்சிகள் அப்படியே தொடர்வதாக சொல்லப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்டவை உள்ளன. இதில் […]
சீமானும் விஜய்யும் எங்கே போனார்கள்.? திருப்பரங்குன்றத்திற்கு சைலன்ட்

முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன் என்று ஆவேசக்குரல் எழுப்பிவந்த நாம் தமிழர் சீமான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்கமாமல் வேடிக்கை பார்ப்பது அவரது கட்சிக்குள்ளே குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திருமுருகன் காந்தி, ‘’திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது டில்லி-ஆரிய-சமஸ்கிருத கும்பல் நடத்தும் […]
நேரில் வந்து தீபம் ஏற்றுவாரா நீதிபதி…? நாடாளுமன்றத்தில் திமுக போர்க்கொடி

நீதிமன்றங்களில் திமுக எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத நிலையில், பணிந்துபோக அரசு தயாராக இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவதற்கு திமுக முழு அளவில் தயாராகி இருக்கிறது. ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் தலைவர்கள் குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. ஆக, இரண்டு கும்பலும் எதிர்ப்புக் குரல் கொடுப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், உச்ச நீதிமன்றத்தில் தற்போது […]

