மலேசியாவில் விஜய்க்கு செம வசூல். அஜிதாவுக்கு பனையூர் அழைப்பு.

விஜய் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் விஜய்யுடன் நடிகர் தனுஷ், பிரபுதேவா, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் ஜனநாயகன் மீது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் […]
பிரேமலதா சாபம் பலிக்குமா..? கட்சி ஒண்ணு பேரம் மூணு

பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சந்திப்பு நடந்தபிறகு அதிமுகவில் இருந்து தொகுதிப் பங்கீடு என்று எண்ணிக்கை பரவியது. தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையைக் கண்டு பிரேமலதா கொதித்துப் போய் சாபம் கொடுத்திருக்கிறார். அதிமுக தரப்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு என்று ஒரு பட்டியல் வெளியானது. அதில் அதிமுகவுக்கு 170 தொகுதிகள், பாஜகவுக்கு 23 தொகுதிகள், பாமவுக்கு 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், அமமுகவுக்கு 6 தொகுதிகள், ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள், […]
தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம், மருத்துவமனையில் கஞ்சா செடி. ஸ்டாலின் ஆட்சிக்கு சபாஷ்

தினமும் ஒரு திட்டத்தைத் தொடங்கிவைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்குத் தூக்கமே வராது. அந்த வகையில் அரசு மருத்துவமனை தோறும் கஞ்சா செடி வளர்க்கும் திட்டம், தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் வழங்கும் திட்டங்களைத் தொடங்கியிருக்கிறாரா ஸ்டாலின் என்று கேள்வி எழுந்துள்ளது. மயிலாப்பூரில் வனிதா என்ற பெண், தனது, வீட்டில் தண்ணீர் கேன் விநியோகம் செய்வது போல், கள்ளச்சாரயத்தையும் விற்பனை செய்து வந்த தகவல் நேற்று வெளியானது. அவர் ,தண்ணீர் கேன் போடுவதுபோல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய […]
ஜிகே மணியை எதிர்த்து சங்கமித்ரா..? மாம்பழத்துக்கு மல்லுக்கட்டு

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து பிரச்னை செய்துவருவதற்கு ஜிகே மணியே முக்கிய காரணம் என்று நினைக்கிறார் அன்புமணி. அதனால்தான், முன்பே தலைமை பதவியில் இருந்து தூக்கினார். ஆனாலும் இப்போது ராமதாஸ்க்கு தூணாக ஜிகே மணியே இருக்கிறார். இந்நிலையில், ஜிகே மணியை தன்னுடைய மகளை தோற்கடிக்க அன்புமணி திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. டாக்டர் ராமதாஸ் ஆதரவுடன் பாமக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 4 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு […]
மோடியின் அடேங்கப்பா ஊழல்… தணிக்கைக் குழு அறிக்கை அம்பலம்

மூன்றாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மோடி ஆட்சியில் இதுவரை உலகம் பார்த்திராத அதி நவீன ஊழல் அரங்கேறியுள்ளதாக தணிக்கைக் குழு ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 14,450 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக்த் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’ஒரே வங்கிக்கணக்கு பல லட்சம் பேருக்கு இல்லாத வங்கி கணக்கில் பணம் என்று மோடியின் திட்டத்தில் 14,450 கோடி மோசடி நடந்திருப்பதை சிஏஜி மத்திய தணிக்கைக்குழு அம்பலப்படுத்தியிருக்கிறது. பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற […]
விஜய் கட்சியில் வில்லங்கம். வைரலுக்காக பெண்கள் ரகளை..?

சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்டார். ஆனால், நீக்கப்பட்ட நிர்வாகியும் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணும் கூட்டாக விளக்கம் கொடுத்து தலைமையை அதிரவிட்டனர், இந்த நிலையில் பதவிக்காக விஜய் காரை காரை வழிமறித்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது. தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக தனக்கு வழங்கப்படும் […]
பாஜவுக்கு 23 சீட், பாமகவுக்கு 23. எடப்பாடிக்கு கூட்டணி கொந்தளிப்பு

வரும் 2026 தேர்தலில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் கேட்போம், 50 தொகுதிகளில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றெல்லாம் கடந்த சில நாட்களாக நிலவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 23 சீட் என்று அதிரடி காட்டியிருப்பது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு விவரம் தொடர்பாக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு […]
இபிஎஸ் 20 பியூஸ் 40. முதல் மீட்டிங்கில் பன்னீருக்கு முடிவுரை..?

2026 தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயல் தலைமையில் கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் தொடங்கியது எஸ்.ஐ.ஆர். தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவாவில் இருப்பதால், இக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங்கை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீலா பேலஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல். கடந்த 2021 தேர்தலில் […]
புதிய கெட்டப்பில் ஸ்டாலின் சீக்ரட் அட்டாக்..? வாக்காளர் பட்டியல் குளறுபடி.

வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட இருப்பது திமுகவுக்கு மேலும் சிக்கலாக மாறும் என்றே சொல்லப்படுகிறது. இதனை சரிக்கட்டுவதற்கு ஸ்டாலின் ரகசியப் பணிகளில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் சில வாக்குச்சாவடிகளில் அசாதாரண முறையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 58 வாக்காளர்கள் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் […]
கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் செம ஸ்பீச். ஸ்டாலின் சகோதரர் அட்டாக்

காலம் காலம் காலமாக திமுகவிற்கு செல்லும் கிறிஸ்துவ வாக்குகள் இந்த முறை விஜய் அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருக்கின்றார். இதற்காக தொடர்ந்து பல்வேறு கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க இருக்கிறாராம். இன்றைய கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜய், ‘’ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இப்படி எல்லா பண்டிகைகளையும் ஷேர் பண்ணிக்கொள்ளும் ஊர் தானே நம் ஊர். வாழ்க்கை முறை வழிபாட்டு முறை வேறென்றாலும் எல்லோரும் சகோதரர்கள் தான். அதனால் தான் […]

