விஜய் கட்சியில் நாஞ்சில் சம்பத்… என்ன பொறுப்பு தெரியுமா?

விஜய்க்கு ஆதரவாக மருது அழகுராஜ், தமிழருவி மணியன் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தார்கள் என்றாலும், அவர் யாரையும் பக்கத்தில் சேர்க்கவில்லை. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்தை கட்சியில் சேர்த்து, அவருக்கு கட்சியில் அமைப்புச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. இதையொட்டி சமீபத்தில் நாஞ்சில் சம்பத் எக்ஸ் தளத்தில், ‘’உண்பது நாளி; உடுப்பவை இரண்டே..! இதுதான் நான் வாழ்க்கையில் பின்பற்றுவது, அதிகாரத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று கருதியதில்லை;அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை நான் மதிப்பதும் […]
விஜய் கேட்ட சின்னங்கள் தெரியுமா ..? கூட்டணி தடுமாற்றம் ஏன்..?

கரூர் நெரிசல் மரணம் விஜய்க்கு எக்கச்சக்க பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அரசியலில் அத்தனை எளிதாக ஜெயித்துவிட முடியாது என்பதை புரிந்திருக்கிறார். அதேநேரம், அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு தயக்கமும் காட்டுகிறார். இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’அதிமுக ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறார்கள். பாஜகவை விட்டு வரமாட்டார்கள். அப்படி இருக்க என்டிஏ கூட்டணியில் போய் சேர்ந்தால் மக்களுக்கு முதல் தேர்தலிலேயே நம் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் […]
பீகார் தேர்தலுக்கு டெல்லியில் குண்டுவெடிப்பு..? மோடிக்கு பொறுப்பு இல்லையா?

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை மாலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன் பின் அந்த கார் வெடித்து சிதறியது. இதில் 13 பேர் உயிர் இழந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தேர்தல் நேரங்களில் எல்லாம் இதுபோன்ற குண்டு வெடிப்புகள் நிகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவில் எதிர்க்கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் சின்னதாக குண்டுவெடிப்பு ஏற்பட்டாலே என்.ஐ.ஏ., தீவிரவாதத் தாக்குதல் என்று துடிக்கும் பாஜக இப்போது அமைதியாக இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியிலும் டெல்லியிலும் பிஜேபி […]
டிடிவி தினகரனுக்கு விஜய் ஆப்பு… மீண்டும் பாஜக ரிடர்ன்..?

அண்ணாமலையின் ஆதரவாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு இப்போது நேரம் சரியில்லை. நயினார் நாகேந்திரன் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு பாஜகவில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. எனவே, அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விஜய் கூட்டணியில் இணைய முடிவெடுத்தார். ஆனால், அங்கேயும் அவருக்கு கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்தி அமமுகவினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு தவெகவையும் விஜய்யையும் பல கட்சிகளும் குறை கூறிய நிலையில், அதிமுக, பாஜக கட்சிகள் விஜய் மீது தவறு இல்லை […]
அண்ணாமலைக்கு எத்தனையாவது இடம்…? அயர்ன்மேன் அலப்பறைகள்

கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 பந்தயத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு வெற்றி பெற்றது, அவரது ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பையும் எதிர்குரூப் ஆட்களிடம் செம விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது. இந்த போட்டி குறித்து பாரதப்பிரதமர் மோடி, ‘’அயர்ன்மேன் போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் […]
சொன்ன நேரத்துக்கு ஜனநாயகன் சிங்கிள் ரிலீஸ்… கரூர் சோகத்தை மறக்க விஜய் கச்சேரி

குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வந்திருந்தால் கரூரில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேராது என்பதுதான் எல்லோரும் சொல்லும் தகவல். அரசியல் என்றால் எப்போதும் லேட் ஆக வரும் விஜய், ஜனநாயகன் சினிமா சிங்கிள் மட்டும் சரியான நேரத்தில் ரிலீஸ் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் பாடியிருக்கிறார். ‘தளபதி […]
உதயநிதிக்கு இம்புட்டு அறிவா..? நோபல் பரிசு கொடுங்கப்பா…

முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டுவதற்காக அவ்வப்போது திமுகவினர் விழா நடத்தி ஜால்ரா போடுவார்கள். அந்த வழியில் உதயநிதிக்கும் ஜால்ரா மேடையை தொடங்கிவிட்டார்கள். அமைச்சர்களின் ஜால்ரா காது கிழிகிறது. திமுக அறிவுத் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “ இந்த அறிவுத் திருவிழா நிகழ்ச்சிக்காக கடந்த ஒருமாத காலமாக மும்முரமாக ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டுக்கள். நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறார். உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” […]
திமுகவை திணற திணற மிரட்டும் கூட்டணிகள்… இடியாப்பச் சிக்கலில் ஸ்டாலின்

சென்னை, திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், ‘’திமுகவை அழித்து விடலாம் என்று நிறைய பேர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது…’ என்று வீரவசனம் பேசி வருகிறார். ஆனால், அவரது கூட்டணிக்குள் எக்கச்சக்க குடைச்சல் ஆரம்பமாகியுள்ளது. முதல் பஞ்சாயத்து திருமாவளவன். இந்த தேர்தலில் எப்படியும் இரட்டை இலக்கத்தில் இடம் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார். இதுவரை வாயில்லாத பூச்சி போல் கப்சிப் என்று இருந்த காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து அதிக […]
சன் டி.வி.க்குக் குடுக்காதீங்க… ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்பாரா விஜய்..?

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் தொலைக்காட்சி உரிமம் சன் டிவிக்கு 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஓடிடி உரிமம் அமேசான் ப்ரைமுக்கு 120 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் திமுக எதிர்ப்பு அரசியல் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் ஜனநாயகன் டிவி உரிமத்தை சன் டி.வி.க்குக் கொடுத்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் […]
டிடிவி தினகரனை பைத்தியம்னு சொல்லிட்டாரே… யாருன்னு தெரியுமா..?

நேற்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து டிடிவி தினகரன் ஒரு பேட்டி கொடுத்தார். அங்கிருந்த ஆதாரங்களை எல்லாம் நாங்கள் அழித்துவிட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்குப் பதிலடி கொடுப்பது போன்று ஆர்.பி. உதயகுமார் பேசியிருக்கிறார். அதாவது, “உனக்கு என்னப்பா? நீ பைத்தியம் எதை வேணும்னாலும் பேசலாம் என்பார்கள். அம்மா அவர்கள் 10 ஆண்டு நடவடிக்கை எடுத்ததால் தினகரன் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டாரோ என்கிற கவலை அவருடைய தம்பிமார்களான எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அம்மா அவரை […]

