ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசு. டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக நியமனம்…!

தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ள நிலையில் தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டிஜிபியாக, சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபியாக, பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது, இந்த பணியிட மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இவர்களுக்குப் புத்தாண்டு பரிசு கிடைத்திருக்கிறது.
அதன்படி ஏடிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், ஏடிஜிபி பால நாகதேவியும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சிபிசிஐடி ஐஜி அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகேஷ்வர் தயாள், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக உள்ள சங்கர், சிறைத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியான அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான அனிஷா உசேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக உள்ள பி.சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று தலைமையிட ஏ.டி.ஜி.பி-யாக டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, மகேந்தர் குமார் ரத்தோட், செயலாக்க பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, நஜ்முல் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கப் பணியகம் சிஐடி பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக, அபின் தினேஷ் மொடக், சிறைத்துறை இயக்குநராக சங்கர், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி-யாக தினகரன் நியமனம், மாநில குற்ற ஆவண காப்பக பிரிவின் ஐ.ஜி-யாக, சோனல் சந்திரா, நிர்வாகப்பிரிவு ஐ.ஜி-யாக மகேஸ்வரி நியமனம், விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி-யாக தேன்மொழி IPS நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மண்டல ஐ.ஜி மாற்றங்கள் வரிசையில் மத்திய மண்டல ஐ.ஜி-யாக, பாலகிருஷ்ணன், தென்மண்டல ஐ.ஜி-யாக, விஜயேந்திர பிதாரி, மேற்கு மண்டல ஐ.ஜி-யாக, சரவணசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர காவல் ஆணையர் வரிசையில் தாம்பரம் மாநகர ஆணையரகத்துக்கு அமல்ராஜ், கோவை மாநகர ஆணையரகத்துக்கு கண்ணன்,திருநெல்வேலி மாநகர ஆணையரகத்துக்கு மணிவண்ணன் ஆகியோர் நியமனம் ஆகியுள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையில் தலைமையிட கூடுதல் ஆணையராக, ஜோஷி நிர்மல் குமார், தென் மண்டலம்(சட்டம்-ஒழுங்கு) கூடுதல் ஆணையராக நரேந்தரின் நாயர், சென்னை வடக்கு (சட்டம்-ஒழுங்கு) இணை ஆணையராக திஷா மிட்டல், சென்னை மேற்கு (சட்டம் – ஒழுங்கு) இணை ஆணையராக உமா மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமையிட இணை ஆணையராக மகேஷ்வரன், அடையாறு துணை ஆணையராக, ஏ.சி.கார்த்திகேயன், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சரக டி.ஐ.ஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள வகையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி-யாக சசாங் சாய், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக தேஷ்முக் சேகர் சஞ்சய், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி-யாக அற.அருளரசு, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி-யாக பி.சரவணன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி-யாக சாமிநாதன், சேலம் சரக டி.ஐ.ஜி-யாக சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்.பி மாற்றங்கள் வரிசையில் விழுப்புரம் எஸ்.பி-யாக, சாய் பிரனீத், திருநெல்வேலி எஸ்.பி-யாக, பிரசன்ன குமார், செங்கல்பட்டு எஸ்.பி-யாக, சிபின், நாகப்பட்டினம் எஸ்.பி-யாக, பல்லா கிருஷ்ணனன், பெரம்பலூர் எஸ்.பி-யாக, அனிதா, கள்ளக்குறிச்சி எஸ்.பி-யாக, எஸ்.அரவிந்த், தென்காசி எஸ்.பி-யாக, ஜி.எஸ்.மாதவன், தூத்துக்குடி எஸ்.பி-யாக, சிலம்பரசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாராட்டு விழாவுக்கு பணமிருக்கு…. போராடுபவர்களுக்குத் தர மனமில்லையா ஸ்டாலின்..?

சமீபத்தில் உதயநிதிக்காக எ.வ.வேலு நடத்திய இளைஞர் அணி மாநாட்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையாகியது. இந்நிலையில் கனிமொழிக்காக நடத்தப்பட்ட திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. ஏனென்றால், இதைவிட குறைந்த தொகைக்காகவே தூய்மைப் பணியாளர்கள், நர்ஸ்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட புடவை கட்டும் பெண்களுக்கு கருப்புப் பட்டை, கருப்பு பூப்போட்ட புடவை, ஜாக்கெட் மற்றும் […]
பெருகும் ரீல்ஸ் ரவுடிகள்… போதை அரசு என்ன செய்யவேண்டும்..?

கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள். இப்போது 18 வயதை கூட ஆகாத டிபன் பாக்ஸ் ஹேர் கட்டிங் புள்ளீங்கோ எல்லாம் பைக்கில் ட்ரிபிள்ஸ் செல்கின்றன. ஹெல்மெட் போடுவதில்லை. பொதுமக்களை அச்சுறுத்தும்படி அதீத ஹாரன் ஒலி எழுப்பி வேகமாக வண்டி ஓட்டுகின்றன. இந்த மைனர் குஞ்சுகள்தான் கும்பலாக சேர்ந்து ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அரிவாள்களை தூக்கி வெட்டும் அளவுக்கு வளர்ந்து […]
சம ஊதியம் வாக்குறுதியை மறக்கலாமா ஸ்டாலின்..? மூன்றாவது நாளாக ஆசிரியர் போராட்டம்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடித்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடக்குமுறையில் கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு நிலவியது. ஏன் இந்த போராட்டம் சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் மூன்றாவது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். அதாவது 2009 மே 31-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 11,700 ரூபாய் ஊதியம் பெற்று வந்தனர். […]
சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன்..? இபிஎஸ் சூசக அறிவிப்பு

நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு அவர் இபிஎஸ்க்கு தங்க முலாம் பூசப்பட செங்கோல் வழங்கினார். இதையடுத்து இந்த தொகுதியில் தமிழிசை நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ் கடந்த 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். ஆறாவது கட்டமாக நேற்று திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் எழுச்சியுரை […]
காங்கிரஸ் கட்சியை உடைக்குமா திமுக..? கூட்டணி ஆட்சி கோஷம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினரை கோபமூட்டியுள்ளது. கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோற்றூப்போன 7 தொகுதிகளிலும் காங்கிரசை அதிமுக வெற்றி வென்றது. ஆகவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் கொடுத்தால் போதும் என்று திமுக […]
பெரியாருக்கும் சீமானுக்கும்தான் போட்டி…! திருமாவுக்கும் அட்டாக்

வரும் 2026 தேர்தலில் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி என்பது போன்று ஒவ்வொரு மேடையிலும் பேசிவருகிறார் நடிகர் விஜய். அதே பாணியில் இப்போது பெரியாருக்கும் சீமானுக்கும் போட்டி என்று நாம் தமிழர் பொதுக்குழுவில் பேசியது பரபரப்பாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய சீமான், ‘’எங்களுக்குத் தேவை இலவசப் பேருந்து பயணம் அல்ல… உலகத் தரமான இலவசக் கல்வி! சாராயம் விற்பது அரசு வேலையா? ஆடு மாடு மேய்த்து பால் விற்பது அரசு […]
மலேசியாவில் விஜய் ரிகார்டு பிரேக். அடுத்து ஜல்லிக்கட்டு போட்டி..?

மலேசியாவில் பிரமாண்டமான இசை விழா நடத்திக் காட்டிய விஜய் அடுத்து தைப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு நடந்துவரும் ஏற்பாடுகள், அவரது கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. சினிமா இசை வெளியீட்டு விழாவிற்கு வெளிநாட்டில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கலந்துகொண்ட விஜய் நிகழ்ச்சி, ‘மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனையாகப் பதிவு செய்யபட்டு, இதற்கான சான்றிதழ் மேடையிலேயே விஜய்யிடம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யைக் கட்டி அணைக்க வேண்டும் போல இருக்கிறது […]
மீண்டும் கைது செய்யப்படுவாரா சவுக்கு சங்கர்..? நீதிமன்றத்துடன் மோதும் திமுக

நீதிமன்றத்துடன் ஆளும் திமுக தொடர்ந்து மோதிக்கொண்டு இருக்கிறது. செந்தில்பாலாஜி விவகாரம், மணல் கொள்ளை, டிஜிபி நியமனம் என்று எல்லா விஷயங்களிலும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து மல்லுக்கட்டுகிறது. இதே வழியில் சவுக்கு சங்கர் கைதுக்கும் நீதிமன்றத்தில் மோதுவதற்கு தயாராவதாகத் தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வழக்கு விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கொடுத்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது உள்ள எல்லா […]
குத்துவிளக்குக்குப் பதிலாக பறையிசை. கனிமொழியை கடிக்கும் இந்து அமைப்புகள்.

சனாதனம் பேசி இந்துக்களை உதயநிதி ஸ்டாலின் வம்புக்கு இழுத்தார். இதற்கான வழக்கு இன்னமும் நடந்துவருகிறது. இந்த நிலையில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கவேண்டிய நிகழ்ச்சியை கனிமொழி, பறை இசை அடித்து தொடங்கியது வில்லங்கமாகிவருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நேற்று சென்னை – முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்ற கனிமொழி பறையிசை அடித்து தொடங்கிவைத்தார். அதோடு, ’நம்ம கலை வடிவங்களை பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள்; பறையைக் கூட […]

